• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

Mathavi by Mathavi
June 7, 2026
in இலங்கை செய்திகள்.
0
சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி, உதயநகர் மேற்கைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனின் விடுதலை தொடர்பான விடயத்தைத் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

தனது இனத்தின் வரலாற்று வலிகளையும், இழப்புகளையும், மன உணர்வுகளையும் இசை மற்றும் பாடல் வழியாக வெளிப்படுத்திய ஓர் இளைஞர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தமிழ் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளைக் குற்றமாகக் கருதி, ஓர் இளைஞரின் சுதந்திரத்தைப் பறித்துச் சிறையில் அடைப்பது, இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்கொள்ளும் கருத்துரிமைச் சவால்களின் தீவிரத்தையே எடுத்துக்காட்டுவதாக மக்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, தமிழ் மக்களினதும் இளைஞர்களினதும் நம்பிக்கையையும் மாற்றத்துக்கான எதிர்பார்ப்பையும் அடித்தளமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கைது இடம்பெற்றிருப்பது, தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான ஏமாற்றத்தையும் நம்பிக்கைச் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளது. சமத்துவம், நீதி, ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை முன்னிறுத்திய அரசின் செயற்பாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளால் கேள்விக்குள்ளாகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளும்கூட, தமிழர் ஆயுதப்போராட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடல்கள், நினைவுகள், அரசியல் குறியீடுகள் காணப்பட்ட சூழல்களில் மக்களின் ஆதரவை நாடியமை மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும். அவ்வாறிருக்க, இன்று ஒரு இளைஞர் பாடல் ஒன்றை வெளியிட்டமைக்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் பாரிய முரண்பாடுகளையும் நியாயபூர்வமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை சங்கீதன் என்ற இளைஞரின் தற்போதைய சுதந்திரத்தை மட்டுமல்லாது, அவரது எதிர்காலக் கல்வி, தொழில், சமூக வாழ்வு மற்றும் கலைப் பயணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அதேவேளை, அவரது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றமை துயர் மிகுந்த விடயமாகும்.

ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் தாங்கள், சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு மட்டுமல்லாது, நீதியின் உயிரையும் மனிதாபிமானத்தின் விழுமியங்களையும் காக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பையும் சுமக்கின்றீர்கள்.

எனவே, இந்த விடயத்தில் மனிதாபிமான மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையிலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் சம நீதியை உறுதிப்படுத்தும் வகையிலும் தங்களது நேரடித் தலையீட்டின் மூலம், கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் சங்கீதனுக்குத் தங்களது அரசமைப்புச் சட்ட அதிகாரங்களின் கீழ் பொது மன்னிப்பு வழங்கி, உடனடி விடுதலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தகைய மனிதாபிமானத் தீர்மானமொன்று தமிழ் மக்களின் மனங்களில் நீதியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாது, இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.” – என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

by Mathavi
June 7, 2026
0

மலையகத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் ஊடாக உயிர் ஆபத்துகளையும், பொருள் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும்,...

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர்...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 7, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு...

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு இப்போதிலிருந்தே எடுக்க...

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

by Mathavi
June 7, 2026
0

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்குப் பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாய்...

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

by Mathavi
June 7, 2026
0

தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள்...

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...

அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் செய்யுங்கள்.!

அமெரிக்காவுடன் உடனே ஒப்பந்தம் செய்யுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

உள்நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகள் காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி