• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

Mathavi by Mathavi
June 7, 2026
in இலங்கை செய்திகள்.
0
மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் குழு கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் குழு கூடி, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது. குறிப்பாக, விரைவில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பரிசீலித்து, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பிரதான குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கட்சியின் அடிமட்டப் பலத்தை அதிகரிப்பதற்காகப் பல்வேறு துணை அமைப்புகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணம் குறித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான அனுமதி அரசியல் குழு உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த முக்கிய உடன்பாடுகளுக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் துணைத் தலைவர் பதவிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிச்சயமாக இரண்டு துணைத் தலைவர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

புதிய அரசியல் கூட்டணிகள் உருவாவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு பலமான அரசியல் கட்சி என்பதால், எமது தனித்துவமான அரசியல் பயணத்தை நாம் தொடர்வோம். எதிர்காலத் தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைப்பது குறித்துப் பின்னர் கலந்துரையாட முடியும். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சியின் அரசியல் சக்திகள் குறித்து எமது கவனம் குறைவாகவே உள்ளது.

தற்போதைய அரசாங்கத்தால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராகப் பலமான அரசியல் சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதே பொதுஜன பெரமுனவின் முக்கிய நோக்கமாகும். அத்துடன், அரசாங்கத்திற்குள் நிலவும் எல்லையற்ற ஊழல்கள், குறிப்பாக நிலக்கரி ஊழல் மற்றும் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு எதிராகப் போராடுவதே எமது இலட்சியமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி போன்ற ஏனைய கட்சிகளிலிருந்து மக்கள் எமது கட்சியுடன் இணைந்து வருவதை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம். கிராம மட்டத்தில் பொதுஜன பெரமுன மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது. புதியவர்களையும் இணைத்துக் கொண்டு மிகப்பலமான முறையில் கட்சி முன்னோக்கிச் செல்லும்.” – என்றார்.

Related Posts

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

ஆபத்தான மரங்களை அகற்றி மலையகத்தை பாதுகாக்க வேண்டும்.!

by Mathavi
June 7, 2026
0

மலையகத்தில் காணப்படும் ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதன் ஊடாக உயிர் ஆபத்துகளையும், பொருள் சேதங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும்,...

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி, வளலாய் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர்...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 7, 2026
0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு...

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

2028 இல் கடன் நெருக்கடி; இப்போதே தயாராகுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு இப்போதிலிருந்தே எடுக்க...

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தின் 9 பிரதேச செயலகங்களுக்கு பாராட்டு.!

by Mathavi
June 7, 2026
0

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்குப் பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதன் முதலாம் ஆண்டில் மிக உயர்ந்த செயற்றிறனை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாய்...

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

பொருளாதார வெற்றியை அரசுகள் அல்ல தொழில்முனைவோரே தீர்மானிக்கிறார்கள்.!

by Mathavi
June 7, 2026
0

தெற்காசிய பிராந்தியத்தின் எதிர்கால பொருளாதார வெற்றியை, அந்தந்த நாட்டு அரசுகளால் மாத்திரம் தீர்மானித்துவிட முடியாது என்றும், பிராந்தியத்தின் தொழில்முனைவோர், வணிக சமூகம் மற்றும் முதலீட்டாளர்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள்...

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு.!

by Mathavi
June 7, 2026
0

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் செயற்படுவோம் எனும் எண்ணக்கருவில் பெண்கள் சந்திப்பு பலத்த வரவேற்புடன் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில்...

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

செம்மணிப் பேரவலம்; மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு.!

by Mathavi
June 7, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.!

by Mathavi
June 7, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி