உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 49 பேரின் உடல்கள் மீட்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
47 பார்வைகள்

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலி மற்றும் அல்ஜீரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ‘அசமகா’ பகுதியிலிருந்து மேற்கே 80 கிலோமீற்றருக்கும் அதிக (49 மைல்) தூரத்தில் இந்த லொறி இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் நைஜீரிய நாட்டவர்கள் என்பதுடன், அவர்கள் மாலி நாட்டில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த கொடூர சோகத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விபத்திலிருந்து இருவர் மாத்திரம் உயிர் தப்பியுள்ளனர்.

அவர்கள் தண்ணீரைத் தேடி 50 கிலோமீற்றருக்கும் அதிக (31 மைல்) தூரம் கால்நடையாகவே பயணித்து, பின்னர் ‘அசமகா’ பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.

அவர்கள் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உடனடியாகச் செயற்பட்ட நைஜீரிய நிவாரணக் குழுவினர், குறித்த இடத்தை வந்தடைந்துள்ளனர்.

அங்கு இயந்திரக் கோளாறுக்குள்ளான லொறிக்கு அடியிலும் அதனைச் சுற்றிலும் சிதறிக் கிடந்த 49 சடலங்களையும் மீட்டுத்துள்ளதுடன், பின்னர் அந்த சடலங்கள் அனைத்தும் அதே இடத்திலேயே கூட்டுப் புதைகுழியில் அடக்கம் செய்ய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0