கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் 25வது புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்.
கர்நாடகாவில் ஆட்சி தலைமையில் மாற்றம் ஏற்பட வசதியாக முதல்வர் பதவியை சித்தராமையா கடந்த 28ம் திகதி ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் தெரிவு செய்யப்பட்டு அவர் தனது பதவியை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.