உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
40 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘1990 சுவசெரிய’ அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அதன் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

அத்துடன், இச்சேவைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாகச் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையினரால் விசேட உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இத்தகைய பதிவுகள் “முற்றிலும் பொய்யானவை” எனவும்,

இவை பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்குடன் திட்டமிட்டுப் பரப்பப்படுபவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ‘சுவசெரிய’ அவசர அம்புலன்ஸ் சேவையானது நாடு தழுவிய ரீதியில் முழுமையான தொழிற்பாட்டுடன் இயங்கி வருவதாகவும், வழமையான முறையை விடவும் கூடுதல் வினைத்திறனுடன் பொதுமக்களுக்கான அவசர சேவைகளை அது வழங்கி வருகின்றது என்றும் பணிப்பாளர் சபை தெளிவுபடுத்தியுள்ளது.

எதிர்காலத்திலும் இந்த அவசர அம்புலன்ஸ் சேவையானது எவ்வித இடையூறுகளுமின்றி, தொடர்ச்சியாகத் தனது பணியை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் என்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிர்வாகம் மேலும் உறுதியளித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0