உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
43 பார்வைகள்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு (Thaksin Shinawatra) மன்னரின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அவர் தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை தாய்லாந்து நீதி அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் ருத்தாபோல் நவரத் உறுதிப்படுத்தியுள்ளார் என அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் இன்று (03) செய்தி வெளியிட்டுள்ளன.

ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாகப் பல வருடங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த தக்ஷின் ஷினவத்ரா, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் தாய்லாந்திற்குத் திரும்பிய உடனே கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் அவருக்குப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், மன்னரின் விசேட பொதுமன்னிப்பு மூலம் அது ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டது.

இந்த ஓராண்டுத் தண்டனையில் 08 மாதங்களைச் சிறையில் கழித்த பின்னர், அவர் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிகப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன், அவரது நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காக அவரது காலில் ‘மின்னணு கண்காணிப்பு வளையல்’ (Electronic Monitoring Anklet) ஒன்றைப் பொருத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போதைய 2026 ஆம் ஆண்டுக்கான அரச பொதுமன்னிப்பு ஆணையின் கீழ், தற்காலிகப் பிணையில் உள்ளவர்களில் தங்களின் தண்டனைக் காலம் முடிவடைய ஒரு வருடத்திற்கும் குறைவான காலம் உள்ளவர்கள், தகுதிநீக்கப் பிரிவுகளுக்குள் வராத பட்சத்தில் முழு விடுதலை பெறத் தகுதியுடையவர்களாகின்றார்கள்.

இந்த விசேட சட்ட விதியின் கீழ் தக்ஷின் ஷினவத்ராவுக்கு முழு அரச பொதுமன்னிப்பு கிடைத்துள்ளதால், அவரது எஞ்சிய தண்டனை காலம் ரத்து செய்யப்படுவதுடன், அவரது காலில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு கண்காணிப்பு வளையல் உடனடியாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடி உத்தரவின் மூலம், தாய்லாந்து அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் தக்ஷின் ஷினவத்ரா, மீண்டும் முழுமையான சுதந்திர மனிதராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

91 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

89 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0