உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நன்கொடை

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளரின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக சுமார் 20 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜேர்மனி மக்கள் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் அனுசரணையில், (international Human Rights Global Mission) அமைப்பின் ஒருங்கிணைப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வைத்தியசாலைக்குத் தேவையான இந்த மருத்துவ உபகரணங்கள் இன்றைய தினம் (3) வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நோயாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் இயன்முறை மருத்துவ (Physiotherapy) உபகரணங்கள்,சேலன் தாங்கிகள்,ஊன்று கோல்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

குறித்த மருத்துவ உபகரணங்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆஸாத் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடமிருந்து வைபவரீதியாக பெற்று கொண்டார்.

முன்னதாக, சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன் ஒழுங்கமைப்பில் சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

53 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

57 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0