உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சந்தேகத்திற்கிடமான முறையில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில், சேற்று நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணொருவரின் உடலம், தெல்தெனிய – ரங்கல பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், உடலத்தை மறைக்கும் நோக்கில் சேற்று நிலத்தில் சுமார் மூன்று அடி ஆழமான குழி தோண்டப்பட்டு அது புதைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணுடன் தங்கியிருந்த அவரது ஆண் நண்பர் தப்பியோடியுள்ளதால், அவரே இக்கொலைச் சம்பவத்தைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் தனது மனைவியைப் பிரிந்து, சுமார் நான்கு வருடங்களாக உயிரிழந்த பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளமை சந்தேகநபரின் தாயார் வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சந்தேகநபர் சில நாட்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, உயிரிழந்த பெண்ணைத் தனது மனைவி எனக் கூறி, அவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த பின்னர், முறைப்பாட்டாளரான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து, அவரது தாயாரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் போதே இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரங்கல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0