உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தன்னைக் கருணைக் கொ*லை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் நபர் ஒருவர் மனு!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
43 பார்வைகள்

தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமைகளை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த துணி வியாபாரியான குறித்த நபர் , அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை நான்காவதாக திருமணம் செய்தார்.

அவரது மனைவி, சிறிய விஷயங்களுக்குக் கூட சந்தேகம் அடைந்து சண்டையிடுவதாக அந்நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும், இதே நிலை நீடித்ததால், குறித்த நபர் , கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினார்.

இந்நிலையில் சூரத் மாவட்ட ஆட்சியரிடம் கிரித் படேல் சமீபத்தில் அளித்த கோரிக்கை மனுவில் ,மனைவி, மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை கொடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தை காப்பாற்ற எண்ணி, இந்த கொடுமைகளை பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும்,

தற்போது எல்லை மீறியதால், வேறு வழியின்றி உயிரை போக்கிக் கொள்ள முடிவெடுத்துள்லதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, கருணை கொலை தொடர்பான தன் மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என அந்நபர் கோரியுள்ளார்.

மூன்று நாட்களுக்குள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், விபரீத முடிவு எடுக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், ‘என் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, நான்காவது மனைவி மனிஷா சவுகான் கொலை செய்ய திட்டமிட்டார் எனவும்

‘இதுதொடர்பாக, பொலிஸாரிடம் முறைப்பாடளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தான் ஒரு ஆண் என்பதால், என் மனுவை பரிசீலிக்கவில்லை’ எனவும் , அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0