உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரேன் மீது இரவோடு இரவாக ரஷ்யா கடும் தாக்குதல்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
46 பார்வைகள்

உக்ரேன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (02) அதிகாலை நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, அங்கு குறைந்தது 29 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலை அடுத்து நகரின் மையப்பகுதியிலிருந்து பெரும் புகை மண்டலங்கள் எழுந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் தஞ்சம் புகுந்தனர்.

டினிப்ரோவில் நான்கு பேர் பலியானதுடன் 16 பேர் காயமடைந்தனர்.

உக்ரேனின் பெரும்பாலான பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

உக்ரேனின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதி மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, உக்ரேன் மீது திட்டமிட்ட தாக்குதல்களை தொடுக்கப் போவதாக மாஸ்கோ கடந்த வாரம் எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0