உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
51 பார்வைகள்

வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்ய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

உக்ரைனின் தொடர்ச்சியான வான்வளி தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா தனது ஜெட் எரிபொருளை (Jet fuel) முக்கியமாக கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளுக்கே புகையிரதத்தின் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றது.

“உள்நாட்டு எரிபொருள் சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கமாகும்” என்று ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா ஏற்கனவே பெட்ரோல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது.

எனினும், டீசல் ஏற்றுமதிக்கு எதிராக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேவேளை, அதுகுறித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி நிறுவனம் ஒன்றுகடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

உக்ரைனின் வான்வளி தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தி குறைக்கப்பட்டதால், ரஷ்யாவின் டீசல் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 10% சரிவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதத்திலும் மேலும் 10% வீழ்ச்சியடைந்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0