உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்மணி புதைகுழி அகழ்வுப் பகுதி; மயான எரிதகன மேடையின் அத்திவாரம் இடிந்து வீழ்ந்தது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது எரிதகன மேடைக்கு அருகில் பல மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் புதைகுழியானது எரிதகன மேடையின் அத்திவாரம் வரை நீண்டு சென்றிருந்த நிலையிலேயே, தற்போது அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போது நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக, குறித்த பகுதி சதுப்பு நிலம் என்பதால் அத்திவாரத்துக்கான பிடிமானம் இல்லாத நிலையிலேயே அது இடிந்து வீழ்ந்துள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வின் முதலாம் கட்டப் பணிகளின்போது, இந்த அத்திவாரத்துக்குக் கீழாக என்புத்தொகுதியொன்று முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தது. எனினும், குறித்த என்புத்தொகுதி முன்னரே பாதுகாப்பான முறையில் மணலிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது அது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0