உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வெசாக் வார நிகழ்வுகள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
69 பார்வைகள்

தேசிய வெசாக் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இன ஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்களகம சுனேத்ராராமய விஹாராதிபதியும் மட்டக்களப்பு மாவட்ட பௌத்த சாசன பாதுகாப்பு சபையின் செயலாளருமான வணக்கத்திற்குரிய கரபுடுகல இந்தரதன தேரரின் வெசாக் தின சிறப்பு தர்மதேஷன சொற்பொழிவு நடைபெற்றது.

இதன்போது பௌத்த போதனைகளை தொடர்ந்து வெசாக் தினத்தின் முக்கியத்தும் தொடர்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இந்த நிகழ்வில் மங்களகம தஹம் பாடசாலை மாணவர்களினால் புத்த பக்தி கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர் ஜி.பிரணவன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது வெசாக் வாரத்தினை முன்னிட்டு விசேட தன்சலும் வழங்கி வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0