உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

டெல்லியில் தரைமட்டம் ஆகியது 5 மாடிக் கட்டிடம் – மீட்பு பணிகள் தீவிரம்!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
56 பார்வைகள்

டெல்லியில் நேற்று மாலை கனமழை பெய்த நிலையில், சாகேத் மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு அருகே 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது.

இதுகுறித்து டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், உள்ளூர் பொதுமக்கள் தங்களது தொலைபேசி ஒளியை பயன்படுத்தி, மீட்புக் குழுவினருடன் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்

இதேவேளை, குறித்த இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இடிந்து விழுந்த அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு தனியார் பயிற்சி மையம் இயங்கி வந்ததும், மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் மாணவர்கள் பலர் அங்கு இருந்ததால், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0