உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய விழாவுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி ரத்து!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
59 பார்வைகள்

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய தினத்தை முன்னட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 250ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருந்த பல முன்னணி கலைஞர்கள், இந்த நிகழ்வு வெள்ளை மாளிகையுடன் கொண்டுள்ள அரசியல் பின்னணியைச் சுட்டிக்காட்டி அதில் இருந்து விலகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, “இந்த இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்யுங்கள்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் விலகிய கலைஞர்களை “அதிக கட்டணம் வசூலிப்பவர்கள்” மற்றும் “சலிப்பானவர்கள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக, வோஷிங்டன் உள்ள நேஷனல் மாலில் ஜூன் 25 முதல் ஜூலை 10 வரை நடைபெறவிருந்த ‘கிரேட் அமெரிக்கன் ஸ்டேட் ஃபேர்’ கச்சேரித் தொடருக்காக கடந்த புதன்கிழமை 9 கலைஞர்கள் அறிவிக்கப்பட்டனர்.

எனினும், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மார்டினா மெக்பிரைட் , தி கொமடோர்ஸ் , யங் எம்சி மற்றும் பிரெட் மைக்கேல்ஸ் ஆகியோர் இந்த நிகழ்விலிருந்து விலகியுள்ளனர்.

“அரசியல் சார்பற்ற நிகழ்வு என்று கூறியே தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் அது தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது” என விலகிய கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் வெனிலா ஐஸ், மில்லி வெனிலி மற்றும் புளோ ரிடா ஆகியோர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்தநிலையில், இசை கச்சேரிகளுக்குப் பதிலாக, அதே இடத்தில் பிரம்மாண்டமான “மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்” அல்லது “அமெரிக்கா ஈஸ் பேக்” என்ற பேரணியை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக வெள்ளை மாளிகையுடன் இணைந்து இந்த நிகழ்வை ‘பிரீடம் 250’ என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக்குழு ட்ரம்ப் நிர்வாகத்தால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட போதிலும், இந்த நிகழ்வு முற்றிலும் அரசியல் சார்பற்றது என அக்குழுவின் ஊடகப் பேச்சாளர் டேனியல் ஆல்வாரெஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜூன் 24ஆம் திகதி நடைபெறும் ஆரம்ப விழாவில் ஜனாதிபதி ட்ரம்ப் முதன்மை உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட ‘அமெரிக்கா 250’ என்ற கட்சி அமைப்பும் நியூயோர்க், பிலடெல்பியா மற்றும் கலிபோர்னியாவில் ஜூலை 4ஆம் திகதி கொண்டாட்டங்களை தனியாக ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0