உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உடைந்து விழும் அபாயத்தில் மெஸ்ஸியின் சிலை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

காற்றில் அந்த பிரமாண்ட சிலை ஆடுவதை அப்பகுதி மக்கள் கண்டறிந்ததை அடுத்து, அதிகாரிகள் அச்சிலையைச் சுற்றிக் கயிறுகளைக் கட்டியுள்ளனர்.

உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் அந்த ஃபைபர் கிளாஸ் சிலை உறுதியற்ற நிலையில் இருப்பதைக் கண்டறிந்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

அதேநேரம், சிலையின் கட்டமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதை மாநில பொதுப்பணித் துறையினர் கண்டறிந்ததைத் தொடர்ந்து அதனை இடிக்கவும் தற்சமயம் நடவடிக்‍கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் மெஸ்ஸியின் ‘கோட் டூர்’ என அழைக்கப்படும் இந்தியப் பயணம், குழப்பமான தொடக்கமாக அமைந்த வேளையில் இந்தச் சிலை திறக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0