லாவோஸில் ஒரு வாரமாக குகைக்குள் சிக்கியிருந்த ஐவர் மீட்பு: இருவரைக் காணவில்லை!
லாவோஸின் சல்சோம்பூன் மாகாணத்தில் உள்ள குகையொன்றினுள் சிக்கியிருந்த ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த குகையினுள்தங்கம் தேடச் சென்ற 7 உள்ளூர்வாசிகள், பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து கடந்த வாரம் குகைக்குள் சிக்கிக்கொண்டனர்
இவர்களில் ஐவர் உயிருடன் மீட்ப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இந்த நிலையில், மீட்புப் பணிகளை முழுமையாக்க மேலதிக ஒட்சிசன் சிலிண்டர்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக தாய்லாந்து தொண்டர் குழுவின் தலைவர் கெங்கார்ட் பொங்காவோங் தெரிவித்துள்ளார்.