• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆவது மீளாய்வுகளுக்கு அங்கீகாரம்.!

Mathavi by Mathavi
May 29, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 5, 6 ஆவது மீளாய்வுகளுக்கு அங்கீகாரம்.!
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 5 ஆவது மற்றும் 6 ஆவது மீளாய்வுகளுக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நேற்று வியாழக்கிழமை தனது உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்கமைய, இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித்தொகை கிடைக்கப்பெறவுள்ளதுடன், இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தக் கடன் தொகை 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இந்நீடிக்கப்பட்ட நிதி வசதியுடன் தொடர்புடைய சில முக்கிய அளவுகோல்களை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள், இறக்குமதி வரம்புகளைக் கடுமையாக்குதல் அல்லது புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்காதிருத்தல் போன்ற தொடர்ச்சியான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, எரிபொருள், மின்சாரம், உர மானியம் மற்றும் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றை வெளியிடுவதற்கும், அவை ஒட்டுமொத்தமாக 100 பில்லியன் ரூபா எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் முன் நிபந்தனையாகக் கோரப்பட்டிருந்தது. எனினும், செப்டெம்பர் மாத இறுதிக்குள் இந்த அளவுகோல்களைச் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சில்லறை எரிபொருள் விலைகளை அவற்றின் செலவு – மீட்பு மட்டங்களுக்குக் கொண்டு செல்வது மற்றும் மாதாந்த விலைச்சூத்திரத்துக்கு அமைவாகக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதிலும் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன. இந்த நிபந்தனையானது 2025 டிசம்பர் மற்றும் 2026 ஏப்ரல் ஆகிய மாதங்களில் மீறப்பட்டுள்ளதுடன், 2026 ஜனவரியில் மாத்திரமே இந்நிபந்தனைக்கு இணங்க இலங்கை செயற்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “இவ்வேலைத்திட்டத்தின் சில அடிப்படை இலக்குகளிலிருந்து இலங்கை விலகியுள்ளது. இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் வரை மந்தமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” – என்றார்.

பொது நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மைத் துறை மற்றும் மின்சாரத் துறை மறுசீரமைப்புகளை முழுமையாக நிறைவு செய்ய இலங்கை அரசு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், கடன் மறுசீரமைப்பு நிலைத்தன்மையில் அதிக ஆபத்து காணப்படுவதாகவும், பணவியல் கொள்கையூடாக விலை ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து சர்வதேச நாணய நிதியத்துக்கு விசேட விளக்கக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, எரிசக்தி விலைகளை மறுசீரமைக்கும் அதேவேளையில், அதன் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைத்து வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்காகத் தற்காலிக மற்றும் இலக்கு வைக்கப்பட்ட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அந்த உதவிப் பொதியில் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்கள், சிறு விவசாயிகளுக்கான உர மானியங்கள், மீனவர்களுக்கான உதவிகள் மற்றும் அஸ்வெசும நிதிப் பரிமாற்ற வேலைத்திட்டத்துக்கான கூடுதல் நிதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. மேலும், சமீபத்தில் திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் ரூபா நிதி மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவத்தின் காரணமாகவே, வெளிநாட்டுக் கொடுப்பனவு நிலுவைகள் தொடர்பான அளவுகோலைச் செயற்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பப்பகியோர்கியோ, “இலங்கை புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதிலிருந்தும், அதிக வரிகளை விதிப்பதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். குறிப்பாக வாகன இறக்குமதியில் இது அவசியமானதாகும்.” – என்றார்.

வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மீது வரிகளை அதிகரிப்பது நீண்ட கால அடிப்படையில் வெற்றிகரமான அணுகுமுறையாக அமையாது என்றும் அவர் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், இலங்கை அரசு தனது 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று பாராட்டியுள்ள அவர், வாகன இறக்குமதி மூலம் கிடைத்த எதிர்பாராத வரி வருவாயானது, அரசின் ஒட்டுமொத்த வருவாய் ஈட்டலை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் சீர்திருத்தச் செயல்முறைகள் சரியான பாதையில் வலுவாக முன்னோக்கி நகர்கின்றன. ‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட சவால்களுக்கு வெற்றிகரமாகப் பதிலளிப்பதற்கான நிதியியல் வெளியை இந்தப் பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.” – என்றும் அரசின் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகத் தற்பொழுது எண்ணெய் விலை உயர்வடைந்து, அதன் விளைவாக இலங்கையின் பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும், சுற்றுலா வருவாய் வீழ்ச்சியடைவதால் நடப்புக் கணக்கு பலவீனமடையக் கூடும் என்றும், இதனால் நாட்டின் பொருளாதாரப் பார்வைக்குக் கடுமையான கீழ்நோக்கிய அபாயங்கள் எழுந்துள்ளன என்றும் எச்சரித்துள்ள அவர், இவ்வருடத்தில் பணவீக்கம் 5 வீத மட்டத்தில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி – 26 பேர் கைது

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம்...

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன்போது முன்னாள் வடக்கு...

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

by selvan
June 17, 2026
0

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை...

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

by selvan
June 17, 2026
0

வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு...

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

by selvan
June 17, 2026
0

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று இந்தியா - நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டுள்ள...

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

by selvan
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும்...

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

by selvan
June 17, 2026
0

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக...

தன்மீது பிழை இல்லை என்றால் கோட்டா ஏன் நீதிமன்றுக்கு ஓட வேண்டும்?

by selvan
June 17, 2026
0

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசின் தலையீடுகள் எதுவுமே இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்தார்.இன்று...

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

by selvan
June 17, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு...

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

ஆரம்பிக்கப்படவுள்ள நானுஓயா – பதுளை புகையிரத சேவைகள்.!

by Mathavi
June 17, 2026
0

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது. ஆறு மாதங்களாக தடை பட்டிருந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி