வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று காலை வீட்டிலிருந்து கொழும்பிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கொழுப்பு சென்றவர்கள் நேற்றுமாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் களவாடப்பட்டு இருந்ததை அவதானித்தனர்.
இந்நிலையில் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Related Posts
மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அரச மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹச் பெருநாளை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொள்வனவு செய்த...
பருத்தித்துறை கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து நேற்று கடற்றொழிலிற்கு 2 படகுகளில் சென்ற 4 பேர் கரை திரும்பாத நிலையில் இன்று கலைமுதல் தேடும் பணிகள் இடம்பெற்று...
நூதனமுறையில் போதை மாத்திரைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழில் கைது!
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழ். போதை ஒழிப்பு பொலிசாரால் கைது...
நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!
நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் நேற்று மட்டும் 948 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
டிக்கோயா இரட்டைக் கொ*லையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்படவில்லை!
ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
விகாரைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!
நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்" என ராஜாங்கனை...
வடக்கின் நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் – மாகாண ஆளுநர் அழைப்பு
வடக்கு மாகாணத்தின் நல் இணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அழைப்பு விடுத்தார். புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆளுநர்...
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு – நபர் ஒருவர் பலி!
களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகக் களுத்துறை தெற்கு...
பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!
"நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்" என்று...
மஸ்கெலியாவில் மூன்று நாட்கள் வெசாக் வலயம்.!
வெசாக் பௌர்ணமி நாள் நாளை முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நிகழ்வை மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா வர்த்தக...










