யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் யாழ். போதை ஒழிப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 1800 போதை மாத்திரைகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
யாழ். நகரப் பகுதியில் “இணையவழி வர்த்தகத்தில் பொதிகள் சேவை” மூலம் போதை மருந்துகள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுவதாக யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பதிசோதகர் கலம்சூரியவுக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதை அடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி செனவிரத்னவின் ஒருங்கமைப்பில் பொலிசார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதற்கமைய பொதிகள் சேவையூடாக கொழும்பில் இருந்து யாழ். குருநகர் பகுதியில் இருக்கும் தபால் நிலையத்திற்கு வந்த பொதியை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழுப்பு பிரிவினர் கைபற்றி சோதனையிட்டனர்.
இதன் போதே குறித்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிசாரின் இந்த துரித நடவடிக்கையின் போது சுமார் 1800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.










