• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
May 28, 2026
in இலங்கை செய்திகள்.
0
பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

“நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். இவை அடிப்படை மனித உரிமைகளாக மாற்றப்படும் போதே, மாதவிடாய் வறுமையைப் போலவே நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் மாதவிடாய் சுகாதார நலன் மற்றும் அது சார்ந்த சவால்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், மருத்துவ நிபுணர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர். இவ்வாறானதொரு சூழலில், மாதவிடாய் வறுமை என்பது நம் சமூகத்தில் பல்வேறு கோணங்களைக் கொண்ட ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறித்துப் பொதுவெளியில் பேசத் தயங்குவதும், கலாச்சார ரீதியாக பொருத்தமற்றது என்று கருதுவது தவறானதாகும். இந்தத் தேக்க நிலையிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் முற்போக்கான சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

மருத்துவத் துறையின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாக முகாமைத்துவம் செய்யாமையினால் பெண்கள் பல்வேறு தீவிர சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் சுழற்சிக்கு உட்படும் 42 இலட்சம் பெண்களில் 70 சதவீதமானோர், அதாவது சுமார் 30 இலட்சம் பேர் முறையான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்பதுடன், ஆபத்தான முறையற்ற வழிகளையே பின்பற்றுகின்றனர். இதனால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களில் வெறும் 12.6 சதவீதமானோர் மாத்திரமே முறையான மருத்துவ உதவிகளைப் பெறுகின்றனர். இந்நிலையானது மாணவிகளின் பாடசாலை வரவைக் கணிசமாகக் குறைத்துள்ளது.

சக மாணவர்களால் கேலி செய்யப்படுவது, பாடசாலை சீருடைகளில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாட்டில் 50 முதல் 60 சதவீதமான மாணவிகள் மாதவிடாய் நாட்களில் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர். இதே நிலைதான் பணிபுரியும் பெண்களுக்கும் ஏற்படுகின்றது. பெண்களின் பங்களிப்பு ஏற்கனவே குறைவாக உள்ள நமது நாட்டின் தொழிலாளர் சந்தையில், இப் பிரச்சினைக்குச் சரியான தீர்வு காணப்படாமல் இருப்பது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கின்றது.

தற்போது பாடசாலை மாணவிகள் 10 இலட்சம் பேருக்கு 1.4 பில்லியன் ரூபாய் செலவில் அரசால் சுகாதார ஆரோக்கிய துவாய்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதற்கு 15 வீத பொதுத்தீர்வை, 18 வீத வற் வரி, 10 வீத துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, 15 வீத செஸ் வரி மற்றும் 2.5 வீத சமூக பாதுகாப்பு ஈட்டு வரி என 5 வகையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களின் அத்தியாவசியத் தேவை மீதான இந்த வரி விதிப்பு மிகவும் தவறான ஒரு நடவடிக்கையாகும்.

இந்தியா, வங்காளதேசம், கென்யா, தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் இந்தச் சுகாதாரப் பொருட்கள் மீதான வரிகளை முற்றாக நீக்கியுள்ளன. ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் இவற்றை பெண்களுக்கு இலவசமாக வழங்க சட்டமியற்றியுள்ளது. எனவே, நாமும் நமது நாட்டுப் பெண் பிள்ளைகளின் நலன் கருதி இவ்வரிகளை உடனடியாக நீக்க வேண்டும்.

உயர்தரத்திலான, குறைந்த விலை ஆரோக்கிய துவாய்களை ஏன் நம்மால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியாது? இதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், உள்நாட்டுத் தொழில்துறை வலுப்பெறுவதுடன், எமது இளைஞர், யுவதிகளுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

2019 ஜனாதிபதித் தேர்தல் முதல் ஐக்கிய மக்கள் சக்தி இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. எனவே, இது தொடர்பாக ஒரு முறையான தேசியக் கொள்கை வகுக்கப்பட்டு, பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

Related Posts

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி – 26 பேர் கைது

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம்...

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன்போது முன்னாள் வடக்கு...

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

by selvan
June 17, 2026
0

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை...

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

மன்னாரில் வெளிநாட்டு உயர்கல்வி வழிகாட்டல் மையம் திறந்துவைப்பு

by selvan
June 17, 2026
0

வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டல் மையமான இன்சிவ் குளோபல் பிரைவேட் நிறுவனம்  மன்னாரில்  நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மன்னார் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு...

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

காங்கேசன்துறையிலிருந்து கப்பலில் இந்தியா புறப்படத் தயாரான 26 பயணிகள் தடுத்துவைப்பு!

by selvan
June 17, 2026
0

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று இந்தியா - நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.தடுத்து வைக்கப்பட்டுள்ள...

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை

by selvan
June 17, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும்...

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலை அசாதாரணமாக அதிகரிக்கும்!

by selvan
June 17, 2026
0

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக...

தன்மீது பிழை இல்லை என்றால் கோட்டா ஏன் நீதிமன்றுக்கு ஓட வேண்டும்?

by selvan
June 17, 2026
0

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசின் தலையீடுகள் எதுவுமே இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்தார்.இன்று...

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம், ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

by selvan
June 17, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு...

மலையக புகையிரதப் பாதையை புனரமைக்கும் பணிகள் தீவிரம்.!

ஆரம்பிக்கப்படவுள்ள நானுஓயா – பதுளை புகையிரத சேவைகள்.!

by Mathavi
June 17, 2026
0

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தது. ஆறு மாதங்களாக தடை பட்டிருந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி