உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
70 பார்வைகள்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை(28) கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்ககளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு போன்ற திட்டங்களினால் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மண்வளம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் செய்ததையே இந்த அரசாங்கமும் செய்கின்றது. கடந்த கால அரசாங்கங்கள் இனங்கண்ட இடங்களில் தான் கனிய மணல் அகழ்வு, காற்றாலை திட்டம் போன்றவற்றை இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது.

இவ்வாறான திட்டங்களினால் மக்கள் வெகுவாக பாதிப்படைகின்றனர். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், குடியேற்றத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. கிட்டத்தட்ட கிராஞ்சிப் பகுதியில் 8000 தென்னம் பிள்ளைகளை அழித்து ஒரு அபிவிருத்தி நடக்கின்றது. அவ்வாறான ஒரு அபிவிருத்தி எமக்கு தேவையில்லை.

கிராஞ்சி மக்கள் தென்னம்பிள்ளைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வாறு 2000 குடும்பங்கள் தென்னம்பிள்ளைகளை வாழ் வாதாரமாக நம்பி அங்கு வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசு அவற்றை அழித்து இவ்வாறான ஒரு அபிவிருத்தியைக் கொண்டு வருவதை ஏற்கமாட்டோம்.

மக்களினுடைய வளம், நிலம் சுரண்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறான செயல்பாடுகளையும், தமது கிராமத்தினுடைய வளத்தையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் முகமாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடுகிறது.

இதில் அரசியல்வாதிகள், மத தலைவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0