உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பத்திற்கு அதிகமான தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என லண்டன் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

தமக்கு தீ விபத்து தொடர்பான அழைப்பு வந்ததாகவும், இதையடுத்து ஃபின்ச்லி, வில்ஸ்டன், வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட் மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்புப் படை குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, கோல்டர்ஸ் கிரீன் வீதி மற்றும் பெவர்லி கார்டன்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகே பல வீதிகள் மூடப்பட்டன.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் வரை அப்பகுதியைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

கடந்த சில மாதங்களில், கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் உள்ள சமூகம் பல தீ விபத்துகளைச் சந்தித்துள்ளது.அவற்றில் ஒன்று, யூத அம்பியூலன்ஸ்

சேவை மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் ஆகும், இது ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0