அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி – ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் நேரப்படி இன்று அதிகாலை 04.50 மணிக்கு ஒரு அமெரிக்க விமானப்படைத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாக்குதலுக்குள்ளான அந்த தளம் எங்குள்ளது என்பதை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறவில்லை.
பந்தர் அப்பாஸ் விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.