உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கொங்கோவுடனான எல்லையை மூடியது  உகாண்டா!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
65 பார்வைகள்

கொங்கோ குடியரசில் அரிய வகை ‘எபோலா’ (Ebola) வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அந்த நாட்டுடனான எல்லையை உடனடியாக மூடுவதற்கு உகண்டா உத்தரவிட்டுள்ளது.

கொங்கோவில் கடந்த மே 15ஆம் திகதி எபோலா பரவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அங்கிருந்து எல்லை கடந்து வந்த சில நோயாளிகள் மூலம் உகண்டா சுகாதாரப் பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், உகண்டா தேசிய எபோலா தடுப்புப் பணிக்குழுவின் அவசரத் தீர்மானத்திற்கு அமைய இந்த எல்லை மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொங்கோவில் தற்போது பரவி வரும் அரிய வகை எபோலா தொற்றினால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், அண்டை நாடான உகண்டாவிற்குள் இந்த ஆபத்தான வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0