உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ் உட்பட  35 சர்வதேச மொழிகளில் ஒலித்த அரபா விசேட பேருரை

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
124 பார்வைகள்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை உலகெங்குமிருந்து சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் புனித மக்கா நகரிலுள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

வெண்ணிற ஆடைகள் அணிந்தவண்ணம் ஒன்று கூடிய ஹாஜிகள், உலக சமாதானம், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அரபாவில் பக்திப் பெருக்குடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை அரபா விசேட பேருரையை (குத்பா) மஸ்ஜிதுந் நபவியின் கம்பீரக் குரலாக விளங்கும் பிரதம இமாம், ஷேக் அலி அல் ஹுதைஃபி , மஸ்ஜிதுல் நமிராவிலிருந்து அரபு மொழியில் நிகழ்த்தினார்.

சவூதி அரேபிய நேரப்படி நேற்று முன்தினம் (26) பிற்பகல் 12:15 மணிக்கு இடம்பெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குத்பா பேருறை உலகளவில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

அத்துடன், தமிழ் மொழி உட்பட உலகின் 35 சர்வதேச மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டு ஒலியேற்றப்பட்டது.

உலகெங்கிலுமிருந்து வருகை தந்துள்ள இலட்சக்கணக்கான ஹாஜிகள் எவ்வித அசௌகரியங்களுக்கும் முகம் கொடுக்காமல், தமது ஹஜ் கடமைகளைச் சிறப்பான முறையில் நிறைவேற்றத் தேவையான சகல வசதிகளையும் சவூதி அரசாங்கம் மிக நேர்த்தியாக மேற்கொண்டுள்ளது.

புனித ஹஜ்ஜை முன்னிட்டு சவூதி அரேபியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேசமயம், ஹாஜிகளுக்குத் தேவையான உணவு, அதிநவீன போக்குவரத்து, 24 மணி நேர சுகாதாரச் சேவை மற்றும் தங்குமிடம் என அனைத்து ஏற்பாடுகளையும் சவூதி அரசு முன்னெடுத்துள்ளது.

இம்முறை இலங்கையிலிருந்தும் சுமார் 3,500 ஹாஜிகள் தமது புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவுக்கு வருகை தந்துள்ளனர் என்பதுடன், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தலைமையிலான குழுவினர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரில் சென்று மேற்பார்வையிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0