உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரான் குழுவினர் நாடு திரும்பினர்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
75 பார்வைகள்

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஈரானின் முதன்மைப் பேச்சாளர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினர் தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சுமுகமான உடன்பாட்டை எட்டுவதற்கான மத்தியஸ்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானிய குழுவினர் கத்தார் சென்றிருந்தனர்.

இந்த நிலையிலேயே, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உள்ளிட்ட குழுவினர் தற்பொழுது ஈரான் திரும்பியுள்ளனர்.

எனினும் இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை மற்றும் ஏன் குறித்த குழுவினர் நாடு திரும்பினர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த பேச்சுவார்த்தைக் குழுவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் ஈரானிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாதி ஆகியோரும் இணைந்திருந்தனர்.

ஈரானின் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த தூதுக்குழுவில் சேர்க்கப்பட்டமையானது,  வொஷிங்டனால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதிச் சொத்துக்களை விடுவிப்பது குறித்து பேசியிருக்கலாம் என்பதை புரிந்துக்கொள்ள முடிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்பட்டது.

இருந்தபோதும், நேற்று அமெரிக்கா தெற்கு ஈரானில் நடத்திய தாக்குதல் மற்றும் ஈரான், அமெரிக்க வான்படைக்கு சொந்தமான ஆளில்லா வானூர்தியை சுட்டுவீழ்த்தியதாக கூறப்பட்டமை என்பன இந்த பேச்சுக்களில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0