உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே முதலாம் திகதி முதல் 2026 பிப்ரவரி 28 ம் திகதி வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: 

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்,

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடனை தள்ளுபடி செய்தல் தொடர்பாக, கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் இந்திய ரிசேவ் வங்கிக்கு செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும்,

தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும்,

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய கடன் தொகை ரூ.50,000 வரையில் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழ்வதும் தள்ளுபடி,

அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு 50% வரை தள்ளுபடி.

கடன் தொகை ரூ.50,001-ரூ.60,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி,

அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.60,001-70,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் தள்ளுபடி,

அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.70,001-80,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி,

அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.80,001-90,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி,

அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.90,001-1,00,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி,

அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.1 லட்சத்துக்கும் மேல் எனும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி,

அதே தொகுக்கு சிறு விவசாயிகளுக்கும் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0