ஆந்திராவில் அதிக வெப்பம் – ஒரே நாளில் 18 லட்சம் கோழிகள் பலி!
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன.
இதனால் 54 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் வெப்ப அலை வீசி வருகிறது.
வெயிலால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகள், விலங்குகளும் பாதிப்படைந்து வருகின்றன.
அவ்வாறு ஒருங்கிணைந்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பண்ணைகளில் 4 நாட்களில் 18 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் வெப்ப அலையால் உயிரிழந்ததாக மாநில கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார்.