உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இராட்சத நச்சுத் தாங்கி வெடிக்கும் அபாயம் – 50 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்வு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
48 பார்வைகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஒரேன்ச் கவுண்டியில் (Orange County) உள்ள விண்வெளி உற்பத்தி ஆலையில் நச்சுத் தாங்கி ஒன்று வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘மெத்தில் மெதக்ரிலேட்’ (MMA) என்ற நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனம் அடங்கிய இராட்சத தாங்கியே வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, அந்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 50,000 மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரேன்ச் கவுண்டியின் கார்டன் குரோவ் (Garden Grove) பகுதியில் அமைந்துள்ள ‘GKN Aerospace’ தொழிற்சாலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள தாங்கியில் சேமித்து வைக்கப்பட்டிுந்த இரசாயனம், தற்போது அளவுக்கு அதிகமாக வெப்பமடைந்து (Thermal Runaway) வருவதால், தாங்கியின் உள்ளே அழுத்தம் அதிகரித்து அது எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து, கலிபோர்னியா ஆளுநர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

6 நகரங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தாங்கி வெடிப்பதைத் தடுப்பதற்காக, ரிமோட் மூலம் இயக்கப்படும் அதிநவீன நீர்த் தூவிகள் மூலம் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து தண்ணீரைப்பாய்ச்சி குளிரூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0