உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரேனியப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய பிரித்தானிய வீரர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
52 பார்வைகள்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய பிரித்தானிய தன்னார்வப் போராளி ஒருவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டெவோனைச் சேர்ந்த 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன் (Ayrton Redfearn), கிழக்கு உக்ரேனில் நடந்த சண்டையில் மே 9 அன்று உயிரிழந்தார்.

2025 ஆம் ஆண்டில் போர்ப் பணியில் இணைந்த பின்னர், அந்த இளம் வீரர் உக்ரேனின் இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

ரெட்ஃபியர்ன் உயிரிழந்த நேரத்தில், அவருக்கு வீரத்திற்கான பதக்கம் வழங்கப்படவிருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதாக பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0