உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவில் கடும் வெப்ப அலை – 37 பேர் உயிரிழப்பு!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
53 பார்வைகள்

இந்தியாவின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது நிலவி வரும் கோடை காலத்தில் மாநிலம் முழுவதும் வெப்ப அலை காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானாவின் வருவாய் அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிலவி வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ளூராட்சி அமைப்பு 4 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே, தீவிரமடைந்து வரும் வெப்ப அலை நிலவரங்களுக்கு மத்தியில் தெலுங்கானா அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம், தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில், வெப்பத்தாக்குதல் காரணமாக குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் அதிக வெப்பநிலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு மாநிலங்களிலும், மக்கள், குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளவர்கள், உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளவும், நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0