உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் வேட்டை விலங்கு கண்டுபிடிப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
55 பார்வைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபடிவங்கள் மூலம், ஒரு பிரம்மாண்ட கடல் வேட்டை விலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கு விஞ்ஞானிகள் ‘டைலோசாரஸ் ரெக்ஸ்’ (Tylosaurus rex) எனப் பெயரிட்டுள்ளனர்.

சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய பெருங்கடல்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த கொடூரமான வேட்டைக்காரன், சுமார் 43 அடி நீளம் கொண்டது எனத் தெரியவந்துள்ளது.

டைனோசர்களின் காலத்தில் கடலின் மிக ஆபத்தான உயிரினமாக இது வாழ்ந்துள்ளது.

இதுவரை அறியப்பட்ட கடல் ஊர்வன இனங்களிலேயே மிகப்பெரிய ‘மொசாசர்கள்’ (Mosasaurs) என்ற வகையைச் சேர்ந்ததாக இந்த ‘டைலோசாரஸ் ரெக்ஸ்’ கருதப்படுகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பு, பண்டைய கடல் வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (Evolution) குறித்த விஞ்ஞானிகளின் நீண்டகாலக் கருத்துக்களை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0