உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மிஸ் வெனிசுவேலா அழகி மீது தாக்குதல்!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
54 பார்வைகள்

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் (2026) பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுவேலா அழகி ஆண்ட்ரியா டெல் வால் ஒப்பனையாளரால் தாக்காப்பட்டுள்ளார்.

தான் தங்கியிருந்த உணவகத்தின் அறையில் வைத்து தான் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிரபல லத்தீன் அமெரிக்க ஒப்பனையாளரான ஜியோவானி லகுனா என்பவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முகத்தில் இரத்தக் காயங்களுடன் அழகி ஆண்ட்ரியா வெளியிட்ட நேரடி சமூக வலைத்தள காணொளி மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உணவகத்தின் அறை சத்தத்தைக் கேட்டு ஏனைய விருந்தினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பிரான்ஸ் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அழகியை மீட்டனர்.

காயமடைந்த ஆண்ட்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை நடத்திய ஒப்பனையாளர் ஜியோவானி லகுனாவை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், பிரான்ஸ் போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0