உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கோவையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு – அயலவர் கைது!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
63 பார்வைகள்

கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்பு எதிர்வீட்டில் வசித்த நன்கு தெரிந்த நபர் ஒருவர், சொக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை உந்துருளியில் கடத்திச் சென்றுள்ளார்.

சிறுமி காணாமல் போனதும், குடும்பத்தினருடன் சேர்ந்து தேடுவது போல் அவரே நாடகமாடியுள்ளமை சிசிரிவி (CCTV) காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

மிகவும் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமுடியைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தமிழக அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

அத்துடன், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தகொடூரக் கொலை தொடர்பாக மேலதிக போலீஸ் பணிப்பாளர் நாயகம் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0