உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

பிரித்தானியாவின் நார்ஃபோக் (Norfolk) பிராந்தியத்தில், சிறுமிகளைக் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மீது 40 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நார்விச் நகரில் உள்ள ஆறு முகவரிகளிலும், டம்பார்டன் நகரில் உள்ள ஒரு முகவரியிலும் நார்ஃபோக் பொலிஸார் நடத்திய அதிரடிச் சோதனைகளின் போது 20 மற்றும் 21 வயதுடைய இந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள 7 பேரும் ‘அகதி’ (Refugee) அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் பிரஜைகள் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், இவர்கள் யாரும் நார்ஃபோக்கில் உள்ள புகலிடம் கோருவோருக்கான தங்குமிடங்களில் வசிக்கவில்லை என்றும், இக்குற்றங்கள் அத்தகைய தங்குமிடங்களில் நடக்கவில்லை என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டிலே இவர்கள் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகவும்
இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 19 வயதுடைய எட்டாவது நபர் ஒருவர் அயர்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 ஆப்கானிஸ்தான் இளைஞர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

93 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0