உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
111 பார்வைகள்

சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட,  அல்பினோ எருமை மன அழுத்தத்தால் உடல் எடை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த எருமை பிரபலமடைந்ததிலிருந்து, அது வசிக்கும் பங்களாதேஷ் பண்ணைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.

இந்தக் கூட்டம் அந்த விலங்கிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், அது எடை இழந்துள்ளதாக அதன் உரிமையாளர் கூறுகிறார்.

அந்த எருமை 1,500 பவுண்டுகள் (680 கிலோ) எடை கொண்டதுடன், மிகவும் அசாதாரணமான தலைமுடியையும் கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே அதற்கு “டொனால்ட் ட்ரம்ப்” என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

டாக்காவின் தென்கிழக்கில் உள்ள நாராயண்கஞ்சில் உள்ள ஒரு உள்ளூர் பண்ணையில் வளர்க்கப்பட்ட இந்த எருமைக்கு நான்கு வயது.

இது ஈத் அல்-அதா அன்று பலியிடப்படும் என்று கூறப்படுகிறது.

பங்காளதேசத்தைச் சேர்ந்த இந்த எருமையின் புகைப்படங்கள் வைரலானதிலிருந்து சமூக ஊடகங்கள் பரபரப்பாகிவிட்டன.

அல்பினோ எருமைக்கு மெலனின் உற்பத்தி குறைபாடு இருப்பதால், அதன் தோலும் முடியும் பொன்னிறமாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவோ இருக்கும்.

எவ்வாறெனினும் குறித்த எருமை எதிர்வரும் மே 27 அன்று ஈத் அல்-அதா பண்டிகையின் போது பலியிடப்படும் என்றும்

அது ஏற்கனவே ஒரு கிலோ கிராம் 550 டாக்கா (US$4.50) என்ற விலையில் விற்கப்பட்டுவிட்டதாகவும் உரிமையாளர் கூறுகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

140 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0