உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் மோடி

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
50 பார்வைகள்

ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு திரும்பினார்.

கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த ஐந்து நாட்கள் பயணத்தில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கனிமங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அவர் ஐந்து நாடுகளுக்கான முக்கியத் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில், பெட்ரோலிய இருப்புக்கள், நீண்டகால எல்பிஜி விநியோகம், பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்ச்சியான முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

மேலும், இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக அபுதாபி உறுதியளித்துள்ளது.

நெதர்லாந்து பயணத்தின்போது, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் பிற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 17 ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

இதேவேளை தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமான இத்தாலியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0