உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் முயற்சி?

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு உடன்படாவிட்டாலும், அந்நாட்டின் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்தும் அமெரிக்காவின் முந்தைய எச்சரிக்கையிலிருந்து தற்போது வாஷிங்டன் பின்வாங்கியுள்ளது.

இருப்பினும் , இஸ்ரேலின் அரசியல் வட்டாரமோ எப்படியாவது போரைத் தூண்டுவதற்குக் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஈரானுடன் மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் ஆர்வமாக இருந்தபோதிலும், அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் அவர்களால் அதைச் செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையும் நீடிக்கிறது.

ஆனால், அதற்கான அனுமதி அமெரிக்காவிடம் இருந்து விரைவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், ஈரானுடன் தற்காலிகப் போர்நிறுத்தத்தை (Truce) எட்ட வாஷிங்டன் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றது.

இந்த உரையாடலின் போது ட்ரம்பின் நிலைப்பாட்டைக் கேட்டு, நெதன்யாகு கடும் கோபமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0