உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை  பதிவு செய்துள்ளது.

1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ (Brothers to the Rescue) என்ற கியூபா மற்றும் அமெரிக்க அமைப்பின் இரண்டு விமானங்களே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டன.

இதில், மூன்று அமெரிக்கர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் விமானங்களை அழிக்க முயற்சித்ததாகவும் அமெரிக்கக் குடிமக்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும்  கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்க குற்றம் சுமத்தியுள்ளது.

94 வயதான காஸ்ட்ரோ, அந்த காலப்பகுதியில் கியூபாவின் ஆயுதப்படைகளின் தலைவராக பதவி வகித்துள்ளார்

இந்த தாக்குதல் சம்பவம் அப்போது சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படாலம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0