உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுடனான மோதல்களில் அமெரிக்கா இழந்த சொத்துக்களின் விபரம் வெளியாகியுள்ளது!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ஈரான் நடத்திய தாக்குதல்களில், அமெரிக்க இராணுவம் தனது வான்படைக் கட்டமைப்பில் உள்ள ‘ரீப்பர்’ (Reaper) ரக ஆளில்லா போர் வானூர்திகளின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதத்தை இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய போர் சூழல் உருவானது முதல் இதுவரை அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்ட 24-க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை ஈரான் அழித்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த இழப்புகளின் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது போர் தொடங்குவதற்கு முன்னர் பென்டகன் வசம் இருந்த மொத்த ஆளில்லா வான்வழி வாகனங்களின் இருப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும்.

இவற்றில் பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள், பறந்து கொண்டிருந்த போதே ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஏனையவை அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் போது தரையிலேயே வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

சில ஆளில்லா வானூர்திகள் தொழில்நுட்ப பிரச்சினைகள்; மற்றும் விபத்துக்கள் காரணமாகவும் இழக்கப்பட்டுள்ளன.”

அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கைகளின்படி, இந்தப் போரின் போது அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான குறைந்தது 42 வானூர்திகள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஈரானுடனான போரில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவத் தளபாட இழப்பு மட்டும் சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0