முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ம் திகதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதற்கமைய மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் முன்னாள் பிரதமரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது