மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைப் பார்த்த பொதுமக்கள் இது குறித்துப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், அது ஓர் ஆணின் சடலம் எனக் கூறினர். எனினும், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில்,"நமது தொப்புள்...
தலவாக்கலையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையான சிறுவனின் நடைபயணம் இடைநிறுத்தம்.!
மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி தலவாக்கலை பகுதியில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்ற சிறுனின் நடைபயணம் இடைநிறுத்தபட்டுள்ளது. மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு...
முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!
முல்லைத்தீவு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விசேட இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு...
பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!
பலாக்காய் பறிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 3.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக்...
சிவனொளிபாத மலைக்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 பேர் கைது.!
இந்த ஆண்டுக்கான சிவனொளிபாத மலை பாத யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை அப்பகுதிக்கு போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மகாவலி...
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!
பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள பாமஸ்ட்டன் தோட்டத்தில் பாரவூர்தி 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம்பெற்றது என...
யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.!
''நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார...
சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சிறையில் பிள்ளையானை இரகசியமாக சந்தித்த ராஜபக்ஷர்கள்.!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக்கைதியான பிள்ளையானுடன்...










