• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!

Mathavi by Mathavi
May 20, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மகாவலி அதிகார சபைக்கு அதிரடிப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இக்கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கந்தசாமி பிரபு ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இது தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பிற்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக விடுவித்து வழங்குமாறு மகாவலி திணைக்களத்துக்கு உத்தரவிட்டதுடன், எதிர்காலத்தில் மேய்ச்சல் தரை சார்ந்து மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகள் எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் 900 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 306 வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், இந்த ஆண்டு 8 ஆயிரத்து 625 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகப் பேசப்பட்டது.

தொடர்ந்து கிராமியப் பாலங்கள், வீதிகள், வீட்டுத்திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எஞ்சிய பணிகள் மற்றும் அவற்றுக்கான நிதித் தேவைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட, குறிப்பாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகளை வழங்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ள, இரண்டு குளங்களை இணைக்கும் ‘முந்தனையாறு நீர்ப்பாசனத் திட்டம்’ குறித்து ஆராயப்பட்டதுடன், அதன் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன் புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி – மண்டூர் பாலங்களின் அபிவிருத்தி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடையாளம் காணப்பட்ட சகல பகுதிகளுக்கும் யானை வேலிகளைப் பகிர்ந்தளித்து, அவற்றை அமைக்கும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் காரியாலயம் மட்டக்களப்பில் இல்லாமையால் நெல் கொள்வனவு சரிவர இடம்பெறுவதில்லை என்று மக்கள் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு உரிய முறையில் சிறந்த தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, அங்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள மூன்று புதிய திட்டங்களின் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்தத் தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகள் விரைவில் ஒதுக்கப்படும் எனவும், வரவிருக்கும் பாதீட்டின் ஊடாக மாவட்டத்துக்குத் தேவையான கூடுதல் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இக்கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

Related Posts

சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!

சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!

by Mathavi
May 20, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில்,"நமது தொப்புள்...

தலவாக்கலையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையான சிறுவனின் நடைபயணம் இடைநிறுத்தம்.!

தலவாக்கலையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையான சிறுவனின் நடைபயணம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 20, 2026
0

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி தலவாக்கலை பகுதியில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்ற சிறுனின் நடைபயணம் இடைநிறுத்தபட்டுள்ளது. மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு...

முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!

முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 20, 2026
0

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விசேட இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு...

பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 20, 2026
0

பலாக்காய் பறிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 3.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக்...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

சிவனொளிபாத மலைக்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 பேர் கைது.!

by Mathavi
May 20, 2026
0

இந்த ஆண்டுக்கான சிவனொளிபாத மலை பாத யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை அப்பகுதிக்கு போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

by Mathavi
May 20, 2026
0

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள பாமஸ்ட்டன் தோட்டத்தில் பாரவூர்தி 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம்பெற்றது என...

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.!

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.!

by Mathavi
May 20, 2026
0

''நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார...

சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

by Mathavi
May 20, 2026
0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சிறையில் பிள்ளையானை இரகசியமாக சந்தித்த ராஜபக்ஷர்கள்.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சிறையில் பிள்ளையானை இரகசியமாக சந்தித்த ராஜபக்ஷர்கள்.!

by Mathavi
May 20, 2026
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக்கைதியான பிள்ளையானுடன்...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

by Mathavi
May 20, 2026
0

காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி