• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.!

Mathavi by Mathavi
May 20, 2026
in இலங்கை செய்திகள்.
0
யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.!
Share on FacebookShare on Twitter

”நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.”

இவ்வாறு இன்று முற்பகல் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு முன்னர் உரையாற்றிய சுமந்திரன் அச்சமயம் இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

அவர் தமது உரையில் கூறியவை வருமாறு:-
“எங்களுடைய தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தைத் திறந்து வைப்பதற்கான அழைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட போதே அவர் இந்த நிகழ்வில் பங்குபற்ற வருவார் என்று நான் உறுதியாக நம்பினேன். அதற்குக் காரணம் உண்டு. அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றிப் பேசுபவர். யாழ்ப்பாண மக்கள் அந்த நூலகத்துக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே நுழைவார்கள், நூலகத்தைக் கோயில்போல் பயன்படுத்துவார்கள் என்று அவர் அடிக்கடி கூறியிருக்கின்றார்.

அண்மையில் கூட கம்பன் விழாவில் தாம் ஆற்றிய உரையிலும் நூலகத்தையும் அதன் பெறுமதியையும் சிலாகித்து அவர் பேசியிருந்தார். ஆகையினால் நூலகத் திறப்பு விழாவுக்கு எங்கள் அழைப்பை ஏற்று அவர் கட்டாயம் வருவார் என்று நாங்கள் நம்பினோம். அந்த அழைப்பை ஏற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இங்கு நாடாவை வெட்டி பொது நூலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அது தொடர்பான நினைவுக்கல்லின் திரை நீக்கத்தை என்னைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஒருவகையில் இது எங்கள் பணிகளை நாங்கள் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்மாதிரி. நாட்டின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்னுதாரணம் – அடையாளம் என்று நான் நினைக்கிறேன்.

நேற்றுக் கூட ஜனாதிபதி உரையாற்றிய சமயம் இந்த நாட்டில் இனியொரு யுத்தம் நடைபெற அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூறியிருந்தார்.

அவர் ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு குழுவில் இருந்து வந்தவர். நாங்கள் ஆயுதமேந்திப் போராடிய ஒரு மக்கள் கூட்டம். இரு தரப்பினருமே இனி யுத்தம் புரிவதில்லை, அதை வரவேற்பதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.

ஆனால், நாட்டில் இனி யுத்தம் ஏற்படக் கூடாது என்றால், அதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான அடையாளமாகவே இன்று பொது நூலகத்தை நாடா வெட்டி திறந்து வைப்பதையும் அதை ஒட்டிய நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைக்கின்ற விடயத்தையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என்று நான் நினைக்கின்றேன்.

அந்த அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியத்தை நான் ஜனாதிபதிக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.” – என்றார் சுமந்திரன்.

Related Posts

சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!

சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!

by Mathavi
May 20, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில்,"நமது தொப்புள்...

தலவாக்கலையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையான சிறுவனின் நடைபயணம் இடைநிறுத்தம்.!

தலவாக்கலையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையான சிறுவனின் நடைபயணம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 20, 2026
0

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி தலவாக்கலை பகுதியில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்ற சிறுனின் நடைபயணம் இடைநிறுத்தபட்டுள்ளது. மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு...

முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!

முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 20, 2026
0

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விசேட இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு...

பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 20, 2026
0

பலாக்காய் பறிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 3.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக்...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

சிவனொளிபாத மலைக்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 பேர் கைது.!

by Mathavi
May 20, 2026
0

இந்த ஆண்டுக்கான சிவனொளிபாத மலை பாத யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை அப்பகுதிக்கு போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!

by Mathavi
May 20, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மகாவலி...

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

by Mathavi
May 20, 2026
0

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள பாமஸ்ட்டன் தோட்டத்தில் பாரவூர்தி 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம்பெற்றது என...

சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

by Mathavi
May 20, 2026
0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சிறையில் பிள்ளையானை இரகசியமாக சந்தித்த ராஜபக்ஷர்கள்.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சிறையில் பிள்ளையானை இரகசியமாக சந்தித்த ராஜபக்ஷர்கள்.!

by Mathavi
May 20, 2026
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக்கைதியான பிள்ளையானுடன்...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

by Mathavi
May 20, 2026
0

காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி