மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி தலவாக்கலை பகுதியில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்ற சிறுனின் நடைபயணம் இடைநிறுத்தபட்டுள்ளது.
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, 07 வயதுடைய சிறுவன் ஒருவன் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் நோக்கி, இன்று புதன்கிழமை (20) காலை நடைபயணமொன்றை மேற்கொண்ட வேளை ஹட்டன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஹட்டன் நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்று நடைபயணத்தை ஹட்டன் நகரில் வைத்து தடை செய்துள்ளது.
பிரேம்ராஜ் கார்கி என்ற இந்த சிறுவன் லிந்துலை, இந்தன்ஹோல் (Indenhaul) தோட்டத்தை சேர்ந்தவராவார். இவர் லிந்துலை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஆகியவற்றில் மகஜர்களை கையளிப்பதற்காகவே குறித்த சிறுவன் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடைபயணம் மேற்கொள்ளும் சிறுவனுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஹட்டன் அதிகாரிகள் ஹட்டன் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று அதனை நிறைவேற்றியுள்ளனர்.
ஏழு வயதுடைய சிறுவன் நெடுந்தூர நடைபயணம் மேற்கொள்வதில் ஏற்படும் ஆபத்துகளை கருதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.










