• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!

Mathavi by Mathavi
May 20, 2026
in இலங்கை செய்திகள்.
0
சீமானுக்கு அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டல்; வேல்முருகன் கடும் கண்டனம்.!
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, மன்னிப்பு கோர வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில்,
“நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களுடைய அரசியல் உரிமை, மொழி உரிமை, நில உரிமை மற்றும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இந்தியப் பெருநிலத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் நமது தொப்புள் கொடி உறவுகள் இன்னமும் சிறை வாழ்க்கையைப் போன்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பல தலைமுறைகள் கடந்தும் முழுமையான மனித உரிமைகளும் நிரந்தரமான வாழ்வாதாரமும் இல்லாமல் வாழ வேண்டிய துயர்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அத்தனைக் கொடுமைகளும் சகோதர யுத்தங்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும், இன ஒற்றுமையைப் பிளவுபடுத்திய துரோகங்களாலும் நடந்தேறியவை என்பதை வரலாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

தமிழர்களைத் தமிழர்களுக்கே எதிராக நிறுத்திய அரசியல் சூழ்ச்சிகளே தமிழினத்தின் அழிவை விரைவுபடுத்தின. இன்றும் அதே வேலையைச் செய்ய சில சக்திகள் துடிக்கின்றன.

தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க, தமிழர்களையே கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது கை விரல்களைக் கொண்டு நமது கண்களைக் குத்த முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்த் தேசிய அரசியல் வளர்ச்சி நிலைக்கு வருவதை விரும்பாத, அதை ஏற்றுக்கொள்ள முடியாத சக்திகளின் பின்புலத்தோடு இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்களைப் பயன்படுத்தி இப்படியான பிளவுபடுத்தும் அரசியல் நடத்தப்படுகிறதோ என்றே தோன்றுகிறது. ஒரு போதும் தமிழினம் இப்படியான செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது.

இன ஒற்றுமையைச் சிதைக்கும் எந்தப் பேச்சும், எந்த அரசியலும், எந்தத் தூண்டுதலும், தமிழர் வரலாற்றின் வலியை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆபத்தான செயலாகும்.

இந்தச் சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் தமிழ்நாட்டிலும் இலங்கை நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கும் பேச்சுக்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிவைத்து “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டு இருப்பேன்” எனவும், ஒருமையில் தரக்குறைவாகவும் பேசியிருப்பது அரசியல் நாகரிகத்திற்கும் ஜனநாயக மரபுகளுக்கும் முற்றிலும் எதிரானது.

ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், இன்னொரு நாட்டின் அரசியல் கட்சித் தலைவரை கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது சாதாரணமானதல்ல.

இதனைச் சம்பந்தப்பட்ட அரசுகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன என்றால், அது தமிழர்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டு மக்களின் மனநிலையையும் மதிக்காத அணுகுமுறையாகவே பார்க்கிறோம்.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இராமநாதன் அர்ச்சுனாவின் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

அவர் உடனடியாக, தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழர் இனம் தனது விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்ததற்கான முக்கிய காரணம் சகோதரத் துரோகமும், ஒற்றுமையின்மையும் என்பதனை இந்த நேரத்தில் மீண்டும் ஆழமாக பதிவு செய்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

தலவாக்கலையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையான சிறுவனின் நடைபயணம் இடைநிறுத்தம்.!

தலவாக்கலையிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையான சிறுவனின் நடைபயணம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 20, 2026
0

மலையக மக்களின் காணி உரிமைகளை கோரி தலவாக்கலை பகுதியில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்ற சிறுனின் நடைபயணம் இடைநிறுத்தபட்டுள்ளது. மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுத்தருமாறு...

முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!

முல்லைத்தீவில் இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 20, 2026
0

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விசேட இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது. முல்லைத்தீவு...

பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

பலாக்காய் பறிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 20, 2026
0

பலாக்காய் பறிக்க சென்றவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 3.00 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக்...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

சிவனொளிபாத மலைக்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 பேர் கைது.!

by Mathavi
May 20, 2026
0

இந்த ஆண்டுக்கான சிவனொளிபாத மலை பாத யாத்திரைக் காலம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை அப்பகுதிக்கு போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 322 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க.!

by Mathavi
May 20, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மகாவலி...

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

by Mathavi
May 20, 2026
0

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள பாமஸ்ட்டன் தோட்டத்தில் பாரவூர்தி 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் 2.00 மணிக்கு இடம்பெற்றது என...

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.!

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.!

by Mathavi
May 20, 2026
0

''நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார...

சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

by Mathavi
May 20, 2026
0

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை, எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சிறையில் பிள்ளையானை இரகசியமாக சந்தித்த ராஜபக்ஷர்கள்.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சிறையில் பிள்ளையானை இரகசியமாக சந்தித்த ராஜபக்ஷர்கள்.!

by Mathavi
May 20, 2026
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக்கைதியான பிள்ளையானுடன்...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

by Mathavi
May 20, 2026
0

காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி