உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இரத்து செய்யப்பட்ட நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய தேர்வு முகமை நிறுனம் இன்று அறிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு மற்றும் பரீட்சை முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த மே 3 ஆம் திகதி நடந்த முந்தைய பரீட்சை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

குறித்த பரீட்சை தொடர்பான தகவல்களுக்கு, பரீட்சார்த்திகளும், பெற்றோர்களும் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை நிறுவனம் ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது. மே 3 ஆம் திகதி அன்று நடைபெற்ற பரீட்சையில் 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பங்கேற்றிருந்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவு குறைந்தது ஏழு பேரைக் கைது செய்துள்ளதுடன், நாடு முழுவதும் பல இடங்களில் சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 2026-2027 கல்வியாண்டிற்கு நீட் பரீட்சை விலக்கு அளிக்கும் வகையில், 2019-ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) 14 ஆவது பிரிவைத் திருத்தும் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடித்தில், தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்காக மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0