உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உத்தரப் பிரதேசத்தில் 111 பேர் உயிரிழப்பு.!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பருவம் தவறி பெய்து வரும் கனமழையால் 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 72 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றன.

இந்தப் புயலால் 227 வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. 170 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

அங்குள்ள 26 மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

புயலால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள், கட்டிடங்கள், உடைமைகள், உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பரைலி, பிரயாக்ராஜில் அதிக சேதங்கள் பதிவாகியுள்ளது.

மணிக்கு 74 முதல் 130 kmph வேகத்தில் காற்று வீசி வருகிறது. மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0