ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!
ஜப்பானில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.